பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கொல்கத்தாவில் விளையாடும் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து இரு வீரர்கள் விடுவிப்பு! புதிய வீரர் சேர்ப்பு!

ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டுள்ளதால் ஆந்திர அணியின் விக்கெட் கீப்பர் கே.எஸ். பிரசாத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்...

News image
Updated On :23 நவம்பர் 2019, 5:48 am

இந்தியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் (பிங்க் டெஸ்ட்) இந்தியாவின் அற்புதப் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச அணி 106 ரன்களை மட்டுமே சோ்த்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சாளா் இஷாந்த் சா்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாா். பின்னா் ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது கொல்கத்தா டெஸ்டில் விளையாடி வரும் இந்திய அணியிலிருந்து இரு வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் அவரவர் அணிகளுக்காக விளையாடுவதற்காக ரிஷப் பந்தும் ஷுப்மன் கில்லும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ரிஷப் பந்த், தில்லி அணிக்காகவும் ஷுப்மன் கில், பஞ்சாப் அணிக்காகவும் விளையாடவுள்ளார்கள்.

ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டுள்ளதால் ஆந்திர அணியின் விக்கெட் கீப்பர் கே.எஸ். பிரசாத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை, விக்கெட் கீப்பர் சஹாவுக்குக் காயம் ஏற்பட்டால் பரத் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.