தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ட்விட்டரில் போட்டோ போட்ட பும்ரா: ஜாலியாக கலாய்த்த இங்கிலாந்து வீராங்கனை

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தை இங்கிலாந்து வீராங்கனை டேனியல் வ்யாட் கிண்டல் செய்துள்ளார்.

News image
டேனியல் வ்யாட்
Updated On :31 அக்டோபர் 2019, 1:57 pm

IANS

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தை இங்கிலாந்து வீராங்கனை டேனியல் வ்யாட் கிண்டல் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா சமீபத்திய தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்பாக முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றிருந்த அவர்  சிகிச்சை முடிந்து தற்போது தாயகம் திரும்பியுள்ளார். காயத்திற்குப் பின்னர் அவரது உடல்நிலையில் அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து மருத்துவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்

போட்டிகளில் மீண்டும் பங்கேற்பதற்கு முன்பாக தற்போது அவர் உடல்வலுவிற்காக உடற்பயிற்சிகள் செய்து வருகிறார்.  எடைகள் அடுக்கப்பட்ட பளுதூக்கும் எந்திரத்தின் அருகில் நின்று கொண்டு, புகைப்படம் ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் "Coming Soon' என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுந்தார்.

அந்தப் புகைப்படத்தில் அடுக்கப்பட்டுள்ள எடைகளை குறித்து விளையாட்டாக இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வ்யாட் "Baby Weights" என்று பதில் அளி த்துள்ளார்.

Coming soon!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.