117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மே.இ.தீவுகள்

இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
நன்றி: டிவிட்டர்/பிசிசிஐ
நன்றி: டிவிட்டர்/பிசிசிஐ


இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி பூம்ராவின் மிரட்டல் பந்துவீச்சால் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. 

மேலும் படிக்க: பும்ரா 'ஹாட்ரிக்' உடன் 6 விக்கெட்டுகள்: 87 ரன்களுடன் திணறும் மே.இ.தீவுகள்

இந்நிலையில், கார்ன்வால் மற்றும் ஹாமில்டன் இன்று 3-ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இன்றைய ஆட்டத்தில் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்த கார்ன்வால் 14 ரன்களுக்கு ஷமி பவுன்சரில் ஆட்டமிழந்தார். இது ஷமியின் 150-வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரைத் தொடர்ந்து, ரன் குவிக்காமல் விக்கெட்டை பாதுகாத்து விளையாடி வந்த ஹாமில்டன் 5 ரன்களுக்கு இஷாந்த் பந்தில் ஆட்டமிழந்தார். கீமர் ரோச்சை (17 ரன்கள்) கடைசி விக்கெட்டாக ஜடேஜா வீழ்த்தினார். இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் பூம்ரா 6 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

299 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஃபாலோ ஆனுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்தியக் கேப்டன் கோலி அதற்கு இடமளிக்காமல் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். 

இதன்படி, இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், இன்னிங்ஸின் 5-வது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் அகர்வால் ரோச் பந்தில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, 3-ஆம் நாள் ஆட்டம் உணவு இடைவேளை வரை ராகுலும், புஜாராவும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்து 315 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com