கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மேட்ச் பிக்ஸிங்கை முழுமையாக கட்டுப்படுத்த முடியா: சுநீல் கவாஸ்கர்

கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங்கை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என முன்னாள் இந்திய கேப்டன் சுநீல் கவாஸ்கர் கூறியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:10 am

DIN


கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங்கை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என முன்னாள் இந்திய கேப்டன் சுநீல் கவாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டிஎன்பிஎல் லீக் போட்டியில் சில வீரர்கள், பயிற்சியாளர்கள் மீது பிக்ஸிங் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில்,  அவர் திங்கள்கிழமை கூறியதாவது: கிரிக்கெட்டில் இருந்து மேட்ச் பிக்ஸிங்கை முழுமையாக ஒழிப்பது முடியாது. பேராசையால் ஈர்க்கப்படுவோர் இருக்கும் வரை இது சாத்தியமில்லை.
சிறந்த சமூகங்களிலும் குற்றவாளிகள் உள்ளனர். கிரிக்கெட்டிலும் அதே போல் பேராசை கொண்ட மனிதர்கள் உள்ளனர். எனினும் தவறு செய்வோர் நீண்ட நாள்களுக்கு அதை செய்ய முடியாது. நாம் எது செய்தாலும் அவை டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. தவறு செய்தால் மற்றவர்கள் நம்மை அம்பலப்படுத்தி விடுவர்என்றார் கவாஸ்கர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.