நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராட் லேவர் கோப்பை: ஐரோப்பா ஹாட்ரிக் சாம்பியன்

உலக அணிக்கு எதிரான ராட் லேவர் கோப்பை போட்டி இறுதிச் சுற்றில் ஐரோப்பிய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

News image
Updated On :23 செப்டம்பர் 2019, 7:44 pm

DIN


உலக அணிக்கு எதிரான ராட் லேவர் கோப்பை போட்டி இறுதிச் சுற்றில் ஐரோப்பிய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
டென்னிஸ் ஜாம்பவான் ராட் லேவர் பெயரில் லேவர் கோப்பை போட்டி டீம் வேர்ல்ட்-டீம் ஐரோப்பா அணிகள் இடையே நடத்தப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த பிரபல வீரர்கள் ஒரு அணியாகவும், உலகின் இதர பிரபல வீரர்கள் ஒரு அணியாகவும் இணைந்து இப்போட்டியில் மோதுகின்றனர்.
முந்தைய இரண்டு போட்டியிலும் ஐரோப்பிய அணியே சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் ஜெனிவாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் உலக அணியின் டெய்லர் பிரிட்ஸ் 7-5, 6-7, 10-5 என்ற செட் கணக்கில் ஐரோப்பாவின் டொமினிக் தீமை வீழ்த்தி பட்ட வாய்ப்பை தக்க வைத்திருந்தார். எனினும் தோல்வியின் விளிம்பில் இருந்த ஐரோப்பிய அணியை ஜாம்பவான் பெடரர் 6-4, 7-6 என கடுமையான போராட்டத்துக்கு பின் உலக அணியின் ஜான் ஐஷ்நரை வென்று மீட்டார்.
இறுதி ஒற்றையர் ஆட்டத்தில் இளம் வீரர் அலெக்சாண்டர் வெரேவ் 6-4, 3-6, 10-4 என்ற செட் கணக்கில் ரனோயிக்கை வீழ்த்தி ஐரோப்பிய அணிக்கு பட்டம் கிடைக்க வகை செய்தார்.
ஹாட்ரிக் சாம்பியன்: ரபேல் நடால் காயத்தால் ஆடாத நிலையில், மூத்த வீரர் பெடரர் தலைமையிலான ஐரோப்பிய அணி மீண்டும் வாகை சூடியது.
லேவர் கோப்பை தலா 6 வீரர்களைக் கொண்ட உலக மற்றும் ஐரோப்பிய அணிகள் இடையே ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 9 ஒற்றையர் மற்றும் 3 இரட்டையர் ஆட்டங்கள் இதில் இடம் பெறும். குறைந்தது 4 வீரர்கள் இரட்டையர் பிரிவில் ஆட வேண்டும். முதலில் 13 புள்ளிகளைப் பெறும் அணிக்கு பட்டம் வழங்கப்படும். வெற்றி பெறும் அணியில் ஒவ்வொரு வீரரும் தலா 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக பெறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.