நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டெஸ்ட் தொடர்: பிரபல வீரரை நீக்கியது இங்கிலாந்து அணி!

நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல வீரர் ஜானி பேர்ஸ்டோவை நீக்கியுள்ளது இங்கிலாந்து அணி...

News image
Updated On :24 செப்டம்பர் 2019, 5:26 am

எழில்

நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல வீரர் ஜானி பேர்ஸ்டோவை நீக்கியுள்ளது இங்கிலாந்து அணி.

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது இங்கிலாந்து அணி. 5 டி20 மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடருக்கான அணியில் பிரபல வீரர் ஜானி பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டுள்ளார். 2018 முதல் 25.91 பேட்டிங் சராசரி மட்டுமே அவர் வைத்துள்ளார். சமீபத்தில் விளையாடிய ஆறு டெஸ்டுகளில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். இவர் நீக்கத்தையடுத்து, ஜாஸ் பட்லர் விக்கெட் கீப்பராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. போப் மாற்று விக்கெட் கீப்பராகச் செயல்படுவார். எனினும் பேர்ஸ்டோவ், டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், பிராட், ராரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், கிராவ்லி, சாம் கரண், ஜோ டென்லி, ஜேக் லீச், சகிப் முகமது, மேத்யூ பார்கின்சன், ஒல்லி போப், டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.