ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

3 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக கோலியை சீண்டிய ஜான் ஸீனா!

டபள்யூ.டபள்யூ.இ என்று அழைக்கப்படும் தொழில்முறை மல்யுத்தப் போட்டியில் ஜான் ஸீனா எனும் மல்யுத்த வீரர் மிகப் பிரபலம்.

News image
Updated On :9 ஜூலை 2019, 5:49 am

டபள்யூ.டபள்யூ.இ என்று அழைக்கப்படும் தொழில்முறை மல்யுத்தப் போட்டியில் ஜான் ஸீனா எனும் மல்யுத்த வீரர் மிகப் பிரபலம். இதில் சுமார் 16 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

Story image

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக இந்திய கேப்டன் விராட் கோலியை சீண்டும் விதமாக கிரிக்கெட் விளையாட்டு பெரிய ஈர்ப்பு இல்லாத அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஸீனா, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு கோலியின் படம் ஒன்றை பதிவிட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது கோலியின் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Story image

''என்னை யாராலும் பார்க்க முடியாது'' (யூ கான்ட் சீ மீ) என்ற வாசகம், ஜான் ஸீனா குறித்து அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். எனவே கோலி கைகுலுக்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் தனது வாசகத்தை ஜான் ஸீனா பதிவிட்டுள்ளார். ஜான் ஸீனா உடன் நேரடி நடப்பு இல்லாத கோலி தொடர்பான இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.