ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒரு டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்: புதிய உலக சாதனையை நிகழ்த்தினார் ரோஹித் சர்மா!

தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா.

News image
Updated On :5 அக்டோபர் 2019, 11:15 am

எழில்

தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா. இதற்கு முன்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் 12 சிக்ஸர்களுக்கு அதிகமாக அடித்ததில்லை. வாசிம் அக்ரம் தான் 12 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். அதனை முறியடித்து 13 சிக்ஸர்களை இந்த டெஸ்டில் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. 127 ரன்கள் எடுத்த 2-வது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. 

ஒரு டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்

13 ரோஹித் சர்மா
12 வாசிம் அக்ரம் 

இதேபோல இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து மேலும் சில சாதனைகளை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

ஒரு டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் சதமடித்த வீரர்கள்

விஜய் ஹசாரே
சுனில் கவாஸ்கர் (3 தடவை)
ராகுல் டிராவிட் (2 தடவை)
விராட் கோலி 
ரஹானே
ரோஹித் சர்மா

ஓர் ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர் 

டெஸ்டுகள் - ரோஹித் சர்மா (13)
ஒருநாள் - ரோஹித் சர்மா (16)
டி20: ரோஹித் சர்மா (10)

* இதற்கு முன்பு 137 முதல் தர கிரிக்கெட் இன்னிங்ஸில் ஒருமுறை கூட ரோஹித் சர்மா ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்ததில்லை. ஆனால், இந்த டெஸ்டில் இரு முறை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதுபோல இருமுறையும் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரரும் இவர்தான். 

* தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே இரு சதங்கள் அடித்த முதல் வீரர், ரோஹித் சர்மா. 

* இந்தியாவில் தொடர்ச்சியாக 7 இன்னிங்ஸில் 50+ ஸ்கோர்களை எடுத்த முதல் வீரர், ரோஹித் சர்மா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.