கரோனாவால் மகளிர் உலகக் கோப்பை போட்டி ஒத்திவைப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த மகளிர் யு-17 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி
கரோனாவால் மகளிர் உலகக் கோப்பை போட்டி ஒத்திவைப்பு
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த மகளிர் யு-17 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 55,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த மகளிர் யு-17 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஃபிஃபா அமைப்பு வெளியிட்டுள்ளது.

மகளிர் யு-17 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி, நவம்பர் 2-21 தேதிகளில் இந்தியாவில் ஐந்து நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com