2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கட்டணம் இல்லாமல் டிடிக்கு பழைய ஆட்டங்களின் விடியோக்களை வழங்கியுள்ள பிசிசிஐ

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டினுள் இருக்கும் ரசிகர்களுக்காகப் பழைய கிரிக்கெட் ஆட்டங்களின் விடியோக்களை தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு கட்டணம் இல்லாமல் வழங்கியுள்ளது பிசிசிஐ.

News image
Updated On :8 ஏப்ரல் 2020, 9:24 am

DIN

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டினுள் இருக்கும் ரசிகர்களுக்காகப் பழைய கிரிக்கெட் ஆட்டங்களின் விடியோக்களை தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு கட்டணம் இல்லாமல் வழங்கியுள்ளது பிசிசிஐ.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 82,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 5,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்நிலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்குப் பழைய ஆட்டங்களின் விடியோக்களை கட்டணம் எதுவும் வசூலிக்காமல் வழங்கியுள்ளது பிசிசிஐ. இதுபற்றி பிசிசிஐ தரப்பு கூறியதாவது:

பழைய கிரிக்கெட் ஆட்டங்களின் விடியோக்களுக்குக் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்கிற பேச்சுக்கே தற்போது இடமல்ல. ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களை வீட்டினுள் இருக்க வைக்க வேண்டும் என்பதுதான் இதன் திட்டம். பழைய விடியோக்களை தூர்தர்ஷனுக்கு வழங்குவதால் வீட்டினுள் இருக்கும் மக்களுக்கு அது உதவும் என்றால் இதை ஏன் செய்யக்கூடாது? பொதுவாக இதுபோன்ற விடியோக்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும். 2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் தோனி சிக்ஸர் அடிக்கும் விடியோவின் கட்டணம் மற்ற ஆட்டங்களின் விடியோவை விடவும் அதிகமாக இருக்கும். முக்கியமான ஆட்டங்கள் மற்றும் எத்தனை முறை பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.