கரோனாவால் வியாபாரத்தில் பின்னடைவைச் சந்திக்கும் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர்!
அழகு சாதனப் பொருள்களுக்கான தேவை இன்று குறைந்துவிட்டது...


80கள் மற்றும் 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு மனோஜ் பிரபாகரை மறக்க முடியாது. இந்திய அணிக்காக 38 டெஸ்டுகள், 130 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ள மனோஜ் பிரபாகர், தற்போது அழகு சாதனப் பொருள்களின் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
கரோனா பாதிப்பால் நானும் பின்னடைவைச் சந்தித்துள்ளேன். அழகு சாதனப் பொருள்களுக்கான தேவை இன்று குறைந்துவிட்டது. இந்தச் சமயத்தில் வியாபாரத்தை அதிகமாக்குவதைப் பற்றி கூட யோசிக்க முடியாது. வைரஸ் தொற்றிலிருந்து உங்கள் முகத்தையும் கைகளையும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் வியாபாரத்தைப் பற்றிப் பேச முடியாது. என்னுடைய ஃபேக்டரி தொழிலாளர்களுக்கு இது மிகவும் கடினமான நேரம். என்னுடைய ஃபேக்டரியின் அருகில் தான் நான் வசிக்கிறேன். சம்பளம் வழங்குவது உள்பட தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறேன். ஆனால் இந்த ஏற்பாடுகளை எவ்வளவு காலத்துக்குச் செய்ய முடியும் எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 11,500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...