சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காணொலி வழியே வகுப்புகளை ஆரம்பித்துள்ள இந்திய வில்வித்தை சங்கம்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இச்சமயத்தில் தனது பயிற்சியாளர்களுக்குக் காணொலி வழியே வகுப்புகளை ஆரம்பித்துள்ளது இந்திய வில்வித்தை சங்கம்.

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 11:11 am

DIN

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இச்சமயத்தில் தனது பயிற்சியாளர்களுக்குக் காணொலி வழியே வகுப்புகளை ஆரம்பித்துள்ளது இந்திய வில்வித்தை சங்கம்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 11,500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தனது பயிற்சியாளர்களுக்குக் காணொலி வழியே வகுப்புகளை ஆரம்பித்துள்ளது இந்திய வில்வித்தை சங்கம்.
மனவியல் ஆலோசகர், ஊட்டச்சத்து நிபுணர் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்டு தனது பயிற்சியாளர்களுக்குக் காணொலி வழியே வகுப்புகளை ஆரம்பித்துள்ளது இந்திய வில்வித்தை சங்கம். இந்தத் திட்டம், பயிற்சியாளர்கள் தங்களது பங்களிப்பை முழுமையாகச் செலுத்துவதற்காக விளையாட்டு அமைச்சகம் செய்துள்ள ஏற்பாடுகளில் ஒன்றாகும். சாய் மற்றும் என்.எஸ்.எஃப். விளையாட்டு அமைப்புகள், பயிற்சியாளர்கள் தங்களுடைய திறமையையும் அறிவையும் புதுப்பிக்க முதல்முறையாக இம்முயற்சியை எடுத்துள்ளன. இந்தக் காணொலி வகுப்புகள் ஏப்ரல் 16 முதல் மே 2 வரை நடைபெறவுள்ளன.

மனவியல் ஆலோசகர், ஊட்டச்சத்து நிபுணர் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள் எங்களுடைய பயிற்சியாளர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்குவார்கள். இது ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று அமைச்சரும் இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவருமான அர்ஜுன் முண்டா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.