அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் கிடையாது: சோயிப் அக்தர் கணிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் கிடையாது: சோயிப் அக்தர் கணிப்பு


கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 18,600 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தன்னுடைய யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

கரோனா பாதிப்பு இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் எனத் தெரியாது. கரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்கிற முழு விவரமும் தெரியாமல் கிரிக்கெட் ஆட்டங்களை ஆரம்பிக்க முடியாது.

கரோனா வைரஸ் தொற்றால் அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறாது என நினைக்கிறேன். நம்மை ஒரு வருடத்துக்கு கரோனா வைரஸ் தொந்தரவு செய்யும். இந்தச் சோதனைக் காலகட்டத்திலிருந்து நாம் மீண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com