சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஎஸ்கே அணியில் வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள்: பிராவோ பாராட்டு

எல்லா நேரங்களிலும் ஒரு வீரரால் ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்துவைத்துள்ளார்கள்.

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 6:26 am

DIN

ஐபிஎல் அணிகளில் சிஎஸ்கே அணியில் நிலவும் அமைதியான சூழல் போல வேறு எங்கும் இல்லை என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிராவோ பாராட்டியுள்ளார்.

ஒரு பேட்டியில் பிராவோ கூறியதாவது:

குடும்பத்தில் நிலவும் அமைதியான சூழல் சிஎஸ்கே அணியில் கிடைக்கும். மற்ற அணிகளில் விளையாடிய போது ஒருபோதும் இந்த உணர்வு கிடைத்ததில்லை. சிஎஸ்கேவில் இணைந்தபோது குடும்பத்தில் இணைந்துகொண்டது போல இருந்தது. சிஎஸ்கேவில் இணையும் எந்தவொரு வீரரும் இதையே உணர்வார்கள். நான் பல அணிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் சிஎஸ்கே அணியில் விளையாடும் போது கிடைக்கும் பாதுகாப்பான உணர்வு வேறெந்த அணியிலும் கிடைக்கவில்லை.

சிபிஎல் டி20 போட்டியில் டிகேஆர் அணியைத் தலைமை தாங்கி மூன்று பட்டங்களை வென்றேன். அந்த லீக் போட்டியில் வெற்றிகரமான அணி டிகேஆர் தான். அதற்குக் காரணம், சிஎஸ்கேவில் நிலவும் சூழலை அந்த அணிக்கும் நான் கொண்டு சென்றதுதான்.

உங்களை கேப்டனும் அணி நிர்வாகமும் அணி உரிமையாளர்களும் நம்பவேண்டும். எல்லா நேரங்களிலும் ஒரு வீரரால் ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்துவைத்துள்ளார்கள். நீங்கள் தோல்வியிலிருந்து மீண்டு வர வாய்ப்பளிப்பார்கள். உங்களுடைய சொந்த ஆட்டத்தை வெளிப்படுத்த சிஎஸ்கே அணியில் சுதந்திரம் அளிக்கப்படும். எங்கள் அணி வீரர்கள் யார் நன்றாக விளையாடினாலும் அவர்களுடைய வெற்றிகளை எங்களுடைய வெற்றியாக எண்ணி மகிழ்வோம் என்று கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு, 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.