சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஎஸ்கேவின் சென்னை பயிற்சி முகாமில் இருந்து ஜடேஜா விலகல்

சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே பயிற்சி முகாமிலிருந்து நட்சத்திர வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2020, 4:51 am

DIN

சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே பயிற்சி முகாமிலிருந்து நட்சத்திர வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் சில நாள்களுக்குப் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். தோனி, ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

தனி விமானம் மூலம் தோனி, ரெய்னா, அம்பட்டி ராயுடு, ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் நாளை சென்னைக்கு வருகிறார்கள். ஆகஸ்ட் 15 முதல் 20 வரை அனைவரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். பிறகு, சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று செல்லவுள்ளார்கள். 

இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே பயிற்சி முகாமிலிருந்து நட்சத்திர வீரர் ஜடேஜா விலகியுள்ளார். சொந்தக் காரணங்களுக்காக அவர் விலகியுள்ளார். எனினும் சென்னையிலிருந்து தான் அவர் துபைக்குச் செல்வார் என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.