எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எனக்குத் தெரிந்தது எல்லாம் கிரிக்கெட்தான்: ரெய்னா (விடியோ)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோவுடன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2020, 4:10 pm

DIN


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோவுடன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை நினைவுகூறும் வகையில் விடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார். இத்துடன், ஓய்வு பெற்றது பற்றிய தனது உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். 

அதில் தனது மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் உள்ளிட்டோரின் ஆதரவு மற்றும் தியாகம் இல்லையெனில் இந்தப் பயணம் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஆதரவு இல்லையெனில் எதுவுமே சாத்தியமாகியிருக்காது என்று தெரிவித்துள்ள அவர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி உள்ளிட்டவர்களின் தலைமையின் கீழ் விளையாடியது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று பதிவிட்டுள்ளார். 

இந்தியக் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் கனவை நனவாக்கி, உதவிய உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்துக்கும், இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவின் இறுதியாக, அவரது ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ரெய்னா பதிவிட்டுள்ள விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.