குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெறவுள்ள நான்காவது கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெறவுள்ள 4-வது கிரிக்கெட் வீரர்...

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 8:14 am

DIN

இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு ஆகியோரது பெயர்கள் இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அமைச்சகத்தைச் சோ்ந்த 12 போ் கொண்ட தோ்வுக் குழு இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.

விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னாவுக்கு ஒரே நேரத்தில் 5 போ் பெயா் பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 4 போ் பெயா் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போது, பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கா்மாகா், துப்பாக்கி சுடுதல் வீரா் ஜிது ராய், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு இந்த விருது ஒன்றாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெறவுள்ள 4-வது கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை ரோஹித் சர்மா பெறவுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.

2019-ல் ரோஹித் சர்மா ஏராளமான ரன்களைக் குவித்தார். 5 டெஸ்டுகளில் 556 ரன்களும் ஒருநாள் ஆட்டத்தில் 1490 ரன்களும் எடுத்தார். ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் எடுத்து சாதனை படைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.