
இந்தியன்ஸ் - ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம், டிராவில் முடிவடைந்துள்ளது.
சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2-ஆம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 85 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.
3-ம் நாளன்று ஆஸ்திரேலிய ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன்பிறகு விளையாடிய இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
முதல் இன்னிங்ஸில் ரஹானே, புஜாரா தவிர இதர இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். அதேபோல 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறியதால் சஹாவைத் தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் அரை சதமெடுக்கவில்லை. 2-வது இன்னிங்ஸில் பிரித்வி ஷா 19, ஷுப்மன் கில் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். சஹா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
131 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி, ஆட்ட முடிவில் 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
2-வது பயிற்சி ஆட்டம், டிசம்பர் 11 அன்று நடைபெறவுள்ளது. இதற்கு அடுத்ததாக டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 முதல் தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.