ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: ரிஷப் பந்த், விஹாரி அபார சதம்!

2-ம் நாள் முடிவில் இந்தியன்ஸ் அணி, 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: ரிஷப் பந்த், விஹாரி அபார சதம்!
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியன்ஸ் அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியன்ஸ் - ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகள் மோதும் பகலிரவு பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இரு மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது. 

2-வது பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற ரஹானே தலைமையிலான இந்தியன்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸி. அணித் தரப்பில் அபாட், ஜேக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 32.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷமி, சைனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பும்ரா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இந்நிலையில் 2-ம் நாளன்று இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடினார்கள். அற்புதமான ஷாட்களால் அனைவரையும் கவர்ந்தார் ஷுப்மன் கில். அவர் 65 ரன்களும் மயங்க் அகர்வால் 61 ரன்களும் எடுத்தார்கள். ரஹானே 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஹாரி - ரிஷப் பந்த், ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டார்கள். 

2-ம் நாள் முடிவில் இந்தியன்ஸ் அணி, 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 104, ரிஷப் பந்த் 103 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்றைய நாளின் கடைசி ஓவரில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 22 ரன்கள் எடுத்து அசத்தினார் ரிஷப் பந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com