சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்டீஸ் ஸ்மித்துக்குக் காயம்: முதல் டெஸ்டில் பங்கேற்பாரா?

காயம் காரணமாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், பயிற்சியிலிருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 8:52 am

DIN

காயம் காரணமாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், பயிற்சியிலிருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

கடந்த சில வாரமாக ஆஸி. வீரர்கள் பலரும் காயங்களினால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

காயம் காரணமாக டேவிட் வார்னர் முதல் டெஸ்டிலிருந்து விலகினார். பிறகு மற்றொரு தொடக்க வீரருமான வில் புகோவ்ஸ்கியும் விலகினார். இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் அபாட்டுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து அவர் விலகினார். தற்போது, ஆஸ்திரேலிய அணியில் ஹென்றிகஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 21 வயது ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீனுக்குக் காயம் ஏற்பட்டது. பேட்ஸ்மேன் அடித்த ஷாட்டினால் பந்து அவருடைய தலையில் பட்டது. இதனால் உடனடியாகப் பயிற்சி ஆட்டத்திலிருந்து விலகி சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவர் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் முதல் டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படும் என ஆஸ்திரேலிய அணிப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். 

இந்நிலையில் முதல் டெஸ்டுக்காக வலைப்பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று, ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு முதுகில் வலி ஏற்பட்டதால் மைதானத்தை விட்டு வெளியேறி, ஓய்வறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து முதல் டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.