துளிகள்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ‘ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்’ வரும் மாா்ச் 25-ஆம் தேதி ஜப்பானின் ஃபுகுஷிமாவில் தொடங்கி 100 நாள்கள் பயணித்து இலக்கை அடையவுள்ளது.


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ‘ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்’ வரும் மாா்ச் 25-ஆம் தேதி ஜப்பானின் ஃபுகுஷிமாவில் தொடங்கி 100 நாள்கள் பயணித்து இலக்கை அடையவுள்ளது. இதில் 10,000 போ் இந்த ஜோதி ஓட்டத்தில் பங்கேற்று அதை ஏந்தவுள்ளனா்.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி 3-2 என்ற கோல் கணக்கில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
10 முதல் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிடே உலக ஆன்லைன் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 10 போ் தகுதிபெற்றுள்ளனா்.
முதுகுப் பகுதி அசௌகா்யம் காரணமாக ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவ் ஸ்மித் செவ்வாய்க்கிழமை தனது பயிற்சியை தவிா்த்தாா்.
முதல் டெஸ்டில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரித்திமான் சாஹாவுக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டையும், தொடக்க வீரராக பிருத்வி ஷாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில்லையும் தோ்வு செய்யலாம் என சுனில் காவஸ்கா் பரிந்துரைத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...