இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கோலிக்கு எங்களிடம் திட்டங்கள் உள்ளன: ஆஸி. கேப்டன் பெயின்

​இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு திட்டங்கள் வகுத்துள்ளதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :16 டிசம்பர் 2020, 4:15 pm

DIN


இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு திட்டங்கள் வகுத்துள்ளதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் ஆட்டம் பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது கோலிக்கு திட்டங்கள் வகுத்துள்ளது பற்றி அவர் தெரிவித்தது:

"சிறந்த வீரர்களுக்கு எதிராக அனைவரிடம் சிறந்த திட்டங்கள் உள்ளன. சூழலுக்கு ஏற்ப அவர்களால் செயல்பட முடியும். அதனால்தான் அவர்கள் சிறந்த வீரர்கள். உலகின் சிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். அவருக்கு எதிராக செயல்படக் கூடிய திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அவை அவருக்கு எதிராக செயல்படும் என எதிர்பார்க்கிறோம். அப்படி செயல்படவில்லையெனில் மாற்றுத் திட்டங்களும் எங்களிடம் உள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.