முதல் டெஸ்டில் கேம்ரூன் கிரீன் அறிமுகம்: ஆஸி. கேப்டன் பெயின்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் அறிமுகமாகவுள்ளதாக...
டிம் பெயின்
டிம் பெயின்
Published on
Updated on
1 min read


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் அறிமுகமாகவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

முதல் டெஸ்ட் நாளை முதல் தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 21 வயது ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீனுக்குக் காயம் ஏற்பட்டது. பேட்ஸ்மேன் அடித்த ஷாட்டினால் பந்து அவருடைய தலையில் பட்டது. இதனால் உடனடியாகப் பயிற்சி ஆட்டத்திலிருந்து விலகி சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவர் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் முதல் டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படும் என ஆஸ்திரேலிய அணிப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறினார்.

இந்நிலையில் முதல் டெஸ்டில் கேம்ரூன் கிரீன் விளையாடுவதை ஆஸி. கேப்டன் டிம் பெயின் உறுதி செய்துள்ளார். அவர் கூறியதாவது:

கேம்ரூன் கிரீன், நேற்று எங்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். இன்று நல்லவிதமாகத் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார். எங்களுடன் பயிற்சியில் ஈடுபட ஆர்வமாக உள்ளார். இதனால் நாளைய டெஸ்டில் கேம்ரூன் கிரீன் அறிமுகமாகவுள்ளார். இது அவருக்கும் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கும் நல்ல செய்தி. அவர் நான்கு ஓவர்களுக்கும் அதிகமாக வீசுவார். டெஸ்ட் ஆட்டத்துக்குத் தேர்வானால் நீங்கள் நல்ல உடற்தகுதியில் உள்ளீர்கள் என அர்த்தம். ஒரு இன்னிங்ஸுக்கு 12-14 ஓவர்களை அவர் வீசினால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு நல்லது. கிரீன் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து விளையாடினால் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேஸில்வுட் ஆகிய மூவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்காக நீண்ட நாள் விளையாட வாய்ப்புள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்காகவே உருவாக்கப்பட்டவர் கிரீன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com