பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

முதல் டெஸ்ட்: இந்திய அணியில் விளையாடும் 11 பேரும் வலது கை பேட்ஸ்மேன்கள்!

ஆஸ்திரேலியாவில் 11 வலது கை பேட்ஸ்மேன்களுடன் விளையாடி கடைசியாக வெற்றி பெற்ற அணி...

News image

ரஹானே

Updated On :16 டிசம்பர் 2020, 10:15 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 11 பேரும் வலது கை பேட்ஸ்மேன்களாக உள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

முதல் டெஸ்ட் நாளை முதல் அடிலெய்டில் தொடங்குகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. தொடக்க வீரராக பிரித்வி ஷா களமிறங்குகிறார். விக்கெட் கீப்பர் வாய்ப்பு சஹாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 11 பேரும் வலது கை பேட்ஸ்மேன்களாக உள்ளார்கள். இதுபோன்ற ஓர் அணி எப்போதும் அமையாது. இதற்கு முன்பு இதுபோல கடைசியாக 2015-ல் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியில் 11 வலது கை பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றார்கள். அதேபோல ஆஸ்திரேலியாவில் 11 வலது கை பேட்ஸ்மேன்களுடன் விளையாடி கடைசியாக வெற்றி பெற்ற அணி - தென் ஆப்பிரிக்கா. வருடம் - 1952.

* கடைசியாக 11 வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடிய டெஸ்ட்: பாகிஸ்தான் vs இங்கிலாந்து, ஷார்ஜா, 2015
* இந்திய அணி கடைசியாக 11 வலது கை பேட்ஸ்மேன்களுடன் விளையாடிய டெஸ்ட்: இந்தியா vs இலங்கை, கொழும்பு, 2015
* ஆஸ்திரேலியாவில் இப்படிக் கடைசியாக நடைபெற்றது - வங்கதேசம் vs ஆஸ்திரேலியா, கேர்ன்ஸ், 2003
* ஆஸ்திரேலியாவில் 11 வலது கை பேட்ஸ்மேன்களுடன் வெற்றி பெற்ற எதிரணி: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, மெல்போர்ன், 1952.

இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், ஷமி, பும்ரா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.