தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இயக்குநராக நியமனம்: சன்ரைசர்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பினார் டாம் மூடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இயக்குநராக ஆஸி. முன்னாள் வீரர் டாம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :16 டிசம்பர் 2020, 4:59 am

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இயக்குநராக ஆஸி. முன்னாள் வீரர் டாம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றின் முடிவில் பல அணிகளைப் பின்னுக்குத் தள்ளி 3-ம் இடம் பிடித்தது வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி. பிளேஆஃப்பில் ஆர்சிபியைத் தோற்கடித்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் தில்லி அணியிடம் தோற்று, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 

2013 முதல் 2019 வரை ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியவர் ஆஸி. முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி. இந்த வருடம் டிரவோர் பேலிஸ், சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக டாம் மூடி ஏழு வருடங்கள் பணியாற்றினார். அதில், அந்த அணி ஐந்து வருடங்கள் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. 2016-ல் சாம்பியன் ஆனது. 2018-ல் 2-ம் இடம் பிடித்தது. கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி. 

55 வயது டாம் மூடி, 2001 முதல் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் இயக்குநராக டாம் மூடிக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணியின் பயிற்சியாளராக டிரவோர் பேலிஸ் தொடரவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.