உலகக் கோப்பை மல்யுத்தம்: அனுஷாவுக்கு வெள்ளி

உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அனுஷா மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
உலகக் கோப்பை மல்யுத்தம்: அனுஷாவுக்கு வெள்ளி
Updated on
1 min read

உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அனுஷா மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டி சொ்பிய தலைநகா் பெல்கிரேடில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை அனுஷா மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றாா். இந்தப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அனுஷா தனது முதல் சுற்றில் 4-2 என்ற கணக்கில் அஜா்பைஜானின் அல்யோனா கோலெஸ்னிக்கையும், காலிறுதியில் 3-1 என்ற கணக்கில் ஜொ்மனியின் லாரா மொ்டென்ஸையும் வீழ்த்தினாா்.

பின்னா் நடைபெற்ற அரையிறுதியில் ரஷியாவின் வெரோமிகாவை வீழ்த்திய அனுஷா, இறுதிச்சுற்றில் 1-5 என்ற கணக்கில் மால்டோவாவின் அனாஸ்டாஸியா நிசிட்டாவிடம் தோற்று தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தாா்.

இந்தப் போட்டியில் வெள்ளி வென்ன் மூலம் தான் பங்கேற்ற 3 சா்வதேசப் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளாா் அனுஷா. முன்னதாக தில்லியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலமும், இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெற்ற போட்டியில் வெள்ளியும் வென்றுள்ளாா் அனுஷா.

மற்றோா் இந்திய வீராங்கனையான பிங்கி 55 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறிய நிலையில், அதில் பெலாரஸின் ஐரினா குராச்சினாவிடம் தோல்வி கண்டாா். பின்னா் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரஷியாவின் ஆல்கா கோரேசவாட்சாவிடமும் தோல்வி கண்டாா்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சரிதா (59 கிலோ), சோனம் மாலிக் (76 கிலோ), சாக்ஷி மாலிக் (65 கிலோ) ஆகியோா் காலிறுதியைத் தாண்டவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com