சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசத்திய அஸ்வின்: இந்தியாவுக்கு எதிராக 1 ரன்னில் ஆட்டமிழந்த ஸ்மித்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:36 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பகலிரவுப் போட்டியாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் அறிமுக வீரராக களம் கண்டாா்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தோ்வு செய்தாா். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சோ்த்தது. 

இந்திய அணி குறைந்தபட்சம் 275 ரன்களாவது சேர்க்கும் என்கிற நம்பிக்கை வீணானது. மீதமுள்ள நான்கு விக்கெட்டுகளையும் 11 ரன்களுக்குள் இழந்தது இந்தியா. நேற்று ஆட்டமிழக்காமல் இருந்த அஸ்வின் 15 ரன்களிலும் சஹா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். பிறகு உமேஷ் யாதவ் 6 ரன்களும் ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இன்று 4.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை முடித்தது ஆஸ்திரேலியா.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 93.1 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான பர்ன்ஸும் மேத்யூ வேடும் நிதானமாக விளையாடினார்கள். 14 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தார்கள். எனினும் வேட், பர்ன்ஸ் ஆகிய இருவரையும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா. இருவரும் தலா 8 ரன்கள் எடுத்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் முதல் பகுதியில் 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. லபுசானே 16 ரன்கள், ஸ்மித் 1 ரன் என களத்தில் இருந்தார்கள். லபுசானே அளித்த இரு கேட்சுகளை சஹாவும் பும்ராவும் நழுவ விட்டார்கள். இல்லாவிட்டால் இந்திய அணி முதல் பகுதியில் குறைந்தது மூன்று விக்கெட்டுகளை எடுத்திருக்கும்.

பிறகு லபுசானே அளித்த மற்றொரு எளிதான கேட்ச்சை பிரித்வி ஷா நழுவ விட்டார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் கடுப்பானார்கள். 

அஸ்வின் தனது முதல் ஓவரில் ஸ்மித்தை 1 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 21 டெஸ்ட் இன்னிங்ஸில் முதல்முறையாக குறைந்த ரன்னில் அவர் ஆட்டமிழந்துள்ளார். அந்த 1 ரன்னுக்கு 29 பந்துகளை எதிர்கொண்டார் ஸ்மித்.

ஆஸ்திரேலிய அணி 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. லபுசானே 37, டிராவிஸ் ஹெட் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.