டிசம்பர் 19-ம் தேதியும்.. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியும்..

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவான இதேநாளில்தான் அதிகபட்ச ஸ்கோரும் பதிவாகியுள்ளது.
டிசம்பர் 19-ம் தேதியும்.. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியும்..
Published on
Updated on
1 min read


டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவான இதேநாளில்தான் அதிகபட்ச ஸ்கோரும் பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்றது. 3-வது நாளான இன்று (டிசம்பர் 19) தனது 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இது.

இந்த மோசமான சாதனை பதிவான இதேநாளில்தான் இந்திய அணியின் அசத்தலான சாதனையும் பதிவாகியுள்ளது.

2016 இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் ஆட்டம் டிசம்பர் 16, 2016-இல் சென்னையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து 477 ரன்கள் குவித்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி கேஎல் ராகுல் (199) மற்றும் கருண் நாயரின் (303*) சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 759 ரன்கள் குவித்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது. இந்த சாதனையை இந்திய அணி ஆட்டத்தின் 4-வது நாளில் அடைந்தது. அதாவது டிசம்பர் 19-ம் தேதி.

இப்படி 4 ஆண்டுகள் வித்தியாசத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவான அதே டிசம்பர் 19-ம் தேதியில் குறைந்தபட்ச ஸ்கோரும் பதிவாகியிருப்பது சுவாரஸ்யமான தகவலாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com