ஷமிக்கு எலும்பு முறிவு: ஆஸி. தொடரிலிருந்து விலகல்?

​இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷமிக்கு எலும்பு முறிவு: ஆஸி. தொடரிலிருந்து விலகல்?


இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. 2-வது இன்னிங்ஸில் 36 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி படுதோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து ஷமியின் கையைத் தாக்கியது. இதனால், வலி ஏற்பட அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி அத்துடன் 2-வது இன்னிங்ஸை முடித்துக்கொண்டது.

ஆட்டம் முடிந்த பிறகு ஷமியின் காயம் குறித்து கேப்டன் விராட் கோலியிடம் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கோலி, "ஷமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகே தகவல் தெரிய வரும்" என்றார். 

இந்த நிலையில், ஷமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். 

இதுகுறித்த அதிகாரப்பூரவ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com