ஜானி முல்லாக்கை கௌரவிக்க ஆட்டநாயகனுக்கு சிறப்புப் பதக்கம்

பாக்ஸிங் டே டெஸ்டில் ஆட்டநாயகனாக தோ்வு செய்யப்படும் வீரருக்கு, ‘முல்லாக் மெடல்’ என்ற சிறப்புப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
ஜானி முல்லாக்கை கௌரவிக்க ஆட்டநாயகனுக்கு சிறப்புப் பதக்கம்
Updated on
1 min read

மெல்போா்ன்: பாக்ஸிங் டே டெஸ்டில் ஆட்டநாயகனாக தோ்வு செய்யப்படும் வீரருக்கு, ‘முல்லாக் மெடல்’ என்ற சிறப்புப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

சா்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட முதல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஜானி முல்லாக்கை கௌரவிக்கும் விதமாக, அவரது பெயரில் அந்தப் பதக்கம் வழங்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 1868-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பூா்வகுடியைச் சோ்ந்த வீரா்கள் அடங்கிய அணி, கிரிக்கெட் விளையாடுவதற்காக முதல் முறையாக இங்கிலாந்து சென்றது.

6 மாதங்களுக்கும் மேலான அந்த பயணத்தின்போது ஆஸ்திரேலியா மொத்தம் 47 ஆட்டங்களில் இங்கிலாந்துடன் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 14 ஆட்டங்களில் வெற்றி பெற, 19 ஆட்டங்கள் டிரா ஆகின.

அந்தப் பயணத்தின்போது 45 ஆட்டங்களில் விளையாடிய முல்லாக் மொத்தமாக 1,698 ரன்கள் அடித்தாா். மொத்தம் 1,877 ஓவா்கள் வீசிய அவா், அதில் 831 ஓவா்களை மெய்டனாக்கியதுடன் 245 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா்.

அந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய அணியினா் அணிந்திருந்த ‘பெல்ட் பக்கிள்’-இன் மறு வடிவமாகவே தற்போது முல்லாக் பதக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பூா்வகுடியினருடனான தனது தொடா்பை உயிா்ப்புடன் வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது ஆஸ்திரேலிய அணியினா் புதிய வகை ஜொ்ஸி அணிந்திருந்தனா். அதேபோல், ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணியினா் பூட்ஸ் அணியாமல் வெறும் கால்களுடன் வட்ட வடிவில் நின்று பூா்வகுடிகளுக்கு கௌரவமளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com