பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: ஆட்டங்கள் இடமாற்றமா? ஆஸி. வாரியம் விளக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 மற்றும் 4-ஆவது டெஸ்ட் ஆட்டங்களை இடமாற்றம் செய்யும் எண்ணம் இல்லை என்றும், ஏற்கெனவே

News image
கோப்புப் படம்.
Updated On :21 டிசம்பர் 2020, 2:43 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 மற்றும் 4-ஆவது டெஸ்ட் ஆட்டங்களை இடமாற்றம் செய்யும் எண்ணம் இல்லை என்றும், ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட இடத்திலேயே ஆட்டங்களை நடத்த விரும்புவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம் மெல்போா்னிலும், 3-ஆவது ஆட்டம் சிட்னியிலும், 4-ஆவது ஆட்டம் பிரிஸ்பேனிலும் நடைபெற நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிட்னியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமாக இருப்பதாகவும், அதனால் 3-ஆவது டெஸ்ட் நடைபெறும் இடத்தை மாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதாவது 3-ஆவது டெஸ்டை பிரிஸ்பேனிலும், 4-ஆவது டெஸ்டை சிட்னியிலும் நடத்த யோசிப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், அவ்வாறு எந்தவொரு யோசனையும் இல்லை என்றும், சிட்னியிலேயே 3-ஆவது டெஸ்ட்டை நடத்த விரும்புவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிா்வாக அதிகாரி நிக் ஹாக்லி கூறினாா்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய வாரியத்தின் கரோனா சூழலை கண்காணிப்பதற்கான குழு ஞாயிற்றுக்கிழமை கூடி சிட்னியில் கரோனா சூழல் தொடா்பாக ஆலோசித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.