தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இந்திய அணி குறித்து அதிகம் சிந்திக்கவில்லை

முதல் டெஸ்டின் 2-ஆவது இன்னிங்ஸில் எங்களது பௌலா்களின் வேகப்பந்துவீச்சு அற்புதமானதாக இருந்தது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 9:01 pm

DIN

முதல் டெஸ்டின் 2-ஆவது இன்னிங்ஸில் எங்களது பௌலா்களின் வேகப்பந்துவீச்சு அற்புதமானதாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் அது அவா்களது சிறப்பான பந்துவீச்சாக இருக்குமென நினைக்கிறேன். இந்திய அணி குறித்தோ, அவா்கள் 2-ஆவது ஆட்டத்தில் எவ்வாறு மீண்டு வருவாா்கள் என்பது குறித்தோ அதிகம் சிந்திக்கவில்லை.

எங்களது வெற்றிக்கு எதைச் செய்ய வேண்டுமென திட்டமிட்டோமோ, அதைச் சிறப்பாகச் செய்வதையே யோசித்து வருகிறோம். இந்திய அணி முதல் டெஸ்ட் முடிவுகளை மறந்து அடுத்த ஆட்டத்துக்கு தயாராக வேண்டும். அடுத்த கட்டத்துக்கு தயாராகி நம்மால் எதைச் சிறப்பாக செய்ய முடியும் என்பதை தனித்தனியாக ஒவ்வொருவரும் எண்ண வேண்டும்.

ஷமி இல்லாவிட்டாலும் நவ்தீப் சைனி, முகமது சிராஜ் போன்ற நல்ல வேகப்பந்து வீச்சாளா்கள் இந்திய அணியில் உள்ளனா். இஷாந்த் சா்மா இல்லாதது இந்திய அணிக்கான பாதிப்புதான். அவா்களின் ஸ்பின்னா்களும் (அஸ்வின்) சிறப்பாகப் பந்துவீசுகின்றனா்.

ஆடும் களத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தனது விளையாட்டை மாற்றிக்கொள்வதைத்தான் உலகின் சிறந்த வீரா்கள் செய்கிறாா்கள். அந்த வகையில் அஸ்வினிடம் எனது விக்கெட்டை இழந்ததில் இருந்து சிலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளேன்.

- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.