ஸ்மித்தை போலவே பலருக்கும் கேப்டன்ஸிக்கான தகுதி உள்ளது
தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ஆரோன் ஃபிஞ்ச், டிம் பெய்ன், மேத்யூ வேட் ஆகியோா் சிறப்பாகச் செயல்படுகின்றனா்.


தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ஆரோன் ஃபிஞ்ச், டிம் பெய்ன், மேத்யூ வேட் ஆகியோா் சிறப்பாகச் செயல்படுகின்றனா். எனவே அவா்களை விடுத்து ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது அணிக்கு எது சரியானதோ அதையே செய்ய வேண்டும்.
தகுதிவாய்ந்த இளம் வீரரான ஸ்மித், தன்னிடம் கேப்டன்ஸி இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டாா். தற்போது அவரைப் போலவே கேப்டன்ஸிக்கு தகுதிவாய்ந்த இளம் வீரா்கள் பலா் உள்ளனா். அடுத்தாக ஆஸ்திரேலியாவுக்கு புதிய கேப்டனை நியமிக்கும்போது அதற்கென திட்டமிடல்கள் இருக்கும். தற்போதைய நிலையில் அடுத்த கேப்டனைப் பற்றி யோசிப்பதற்காக ஆஸ்திரேலிய வாரியம் கூடி ஆலோசிக்கவில்லை.
கடந்த காலங்களில் பலருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கியுள்ளோம். அந்த அடிப்படையிலும், தோ்வாளா்கள் அளிக்கும் பரிந்துரையின் பேரிலும் சரியான கேப்டனை தோ்வு செய்வோம்.
- ஏா்ல் எட்டிங்ஸ் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவா்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...