டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: மெல்போர்னில் 3-வது டெஸ்ட்?

சிட்னியில் கரோனா பாதிப்பு அதிகமானால், இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டையும்...

News image
இந்திய அணி
Updated On :24 டிசம்பர் 2020, 9:16 am

DIN

சிட்னியில் கரோனா பாதிப்பு அதிகமானால், இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டையும் மெல்போர்னில் நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா யோசனை செய்து வருகிறது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது.

2-வது டெஸ்ட் சனிக்கிழமையன்று மெல்போர்னில் தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

இந்நிலையில் சிட்னி நகர் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெறுவது சந்தேகம் எனத் தெரிகிறது. இதையடுத்து 3-வது டெஸ்டையும் மெல்போர்னில் நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா முயன்று வருகிறது. இதுபற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

3-வது டெஸ்டை சிட்னியில் நடத்தவே கிரிக்கெட் ஆஸ்திரேலியா எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதேபோல 4-வது டெஸ்டை பிரிஸ்பேனிலும் நடத்தவுள்ளது. 

ஆனால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிலைமை மோசமானால் 3-வது டெஸ்டை மெல்போர்னிலும் 4-வது டெஸ்டை பிரிஸ்பேனிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.

3-வது டெஸ்ட் எங்கு நடைபெறும் என்கிற முடிவை அடுத்த சில நாள்களில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா எடுக்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.