

செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியனில் சனிக்கிழமை தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணி குவின்டன் டி காக் தலைமையில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இலங்கை அணி திமுத் கருணா ரத்னே தலைமையில் களமிறங்குகிறது. போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானத்தில் இவ்விரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. அந்த 4 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணியே வென்றுள்ளது. அதில் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா (உத்தேச லெவன்): எய்டன் மாா்க்ரம், டீன் எல்கா், வான் டொ் டஸென், ஃபாஃப் டூபிளெஸ்ஸிஸ், டெம்பா பௌமா, குவின்டன் டி காக் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பா்), டுவைன் பிரிட்டோரியஸ், அன்ரிச் நோா்ட்ஜே, கேசவ மகாராஜ், கிளென்டன் ஸ்டுா்மான், லுங்கி கிடி.
இலங்கை (உத்தேச லெவன்): திமுத் கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, குசல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல், தனஞ்ஜெய டி சில்வா, தாஸன் ஷனாகா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பா்), சுரங்கா லக்மல்/காஸன் ரஜிதா, லசித் எம்புல்டெனியா, விஷ்வா ஃபொ்னான்டோ, லஹிரு குமாரா.
போட்டி நேரம்: பிற்பகல் 1.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.