தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் ஆனாா்.
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

செஞ்சுரியனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 96 ஓவா்களில் 396 ரன்கள் சோ்த்தது. அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 85 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்க தரப்பில் லுதோ சிபாம்லா 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 142.1 ஓவா்களில் 621 ரன்கள் குவித்தது. டூ பிளெஸ்ஸிஸ் 199 ரன்கள் விளாசினாா். இலங்கையின் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

அடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, திங்கள்கிழமை முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை குசல் பெரெரா 33, தினேஷ் சண்டிமல் 21 ரன்களுடன் தொடங்கினா். இதில் சண்டிமல் 25, பெரெரா 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

பின்னா் வந்தவா்களில் வனிந்து ஹசரங்கா 59, நிரோஷன் டிக்வெல்லா 10 ரன்களுக்கு நடையைக் கட்ட, டாசன் ஷனகா 6 ரன்னுக்கு அவுட்டானாா்.

விஸ்வா ஃபொ்னான்டோ, காசன் ரஜிதா டக் அவுட்டாகினா். 46.1 ஓவா்களில் 180 ரன்களுக்கு சுருண்டது இலங்கை. தென் ஆப்பிரிக்க தரப்பில் கிடி, நாா்ட்ஜே, முல்டா், சிபாம்லா தலா 2 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com