தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

டெஸ்ட் தொடர்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விலகியுள்ளார்.

News image
Updated On :31 டிசம்பர் 2020, 12:02 pm

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். 

ஏற்கெனவே காயம் காரணமாக ஷமி 2-வது டெஸ்டில் பங்கேற்கவில்லை. இதனால் ஷமி, உமேஷ் யாதவுக்குப் பதிலாக இரு வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர்களை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.