சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மார்னஸ் என்னை பிரதிபலிக்கிறார்: சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மார்னஸ் லாம்பஷே தன்னை பிரதிபலிப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 8:42 am

DIN

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மார்னஸ் லாம்பஷே தன்னை பிரதிபலிப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பாதிப்பு நிதியுதவி திரட்டும் கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதன் ஒரு அணிக்கு இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக செயல்படுகிறார். ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது,

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக மார்னஸ் லாம்பஷே களமிறக்கப்பட்டார். அவர் அந்த டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய 2ஆவது பந்திலேயே ஆர்ச்சரின் பவுன்சரில் தாக்கப்பட்டார். 

ஆனால், அடுத்த 15 நிமிடங்கள் களத்தில் பந்துகளை எதிர்கொண்ட விதம் என்னை பிரமிக்க வைத்தது. ஃபுட்வொர்க் அற்புதமாக இருந்தது. அதற்கு அவருடைய மனவலிமையே காரணம். இதில் மார்னஸ் என்னை பிரதிபலித்தார். அப்போதே சிறந்த வீரராக வருவார் என்பதை உணர முடிந்தது. 

விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் திறமையான வீரர்கள் தான். எனவே அவர்களுக்கு இடையில் ஒப்பீடு செய்ய வேண்டாம். என்னையும் பல இளம் வீரர்களுடன் ஒப்பீடு செய்கின்றனர். அதில் எனக்கு விருப்பமும் இல்லை. ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திறமை உண்டு. 

கோலி, ஸ்மித் ஆகிய இருவரும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் ஆட்டத்தால் கவர்ந்துள்ளனர். இருவரின் ஆட்டமும் ரசிக்கக்கூடியதாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.