இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரபடா விலகல்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், மார்ச் 12 முதல் தொடங்குகிறது. 
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரபடா விலகல்!
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபடா, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ரபடாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடுத்த நான்கு வாரங்களுக்குச் சிகிச்சை எடுத்து ஓய்வு எடுக்கவேண்டும் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்தியச் சுற்றுப்பயணத்திலும் பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் தில்லி அணியில் இடம்பெற்றுள்ள ரபடா, மார்ச் 30 அன்று நடைபெறும் அந்த அணியின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், மார்ச் 12 முதல் தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com