தென் ஆப்பிரிக்காவில் நேற்று முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி தொடங்கியுள்ளது.
பிரியம் கர்க் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமெடுத்த மும்பையைச் சேர்ந்த 17 வயது யாஷவி ஜைஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை இலங்கை அணிக்கு எதிராக நாளை விளையாடவுள்ளது.
இதற்கு முன்பாக 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா யு-19 உலக சாம்பியன் ஆகியுள்ளது. 2018-ல் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 13-வது யு-19 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அணிகளில் இந்திய அணி, குரூப் ஏ-வில் ஜப்பான், நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள்:
ஜனவரி 19: இந்தியா vs இலங்கை
ஜனவரி 21: இந்தியா vs ஜப்பான்
ஜனவரி 24: இந்தியா vs நியூஸிலாந்து
ஜனவரி 28 முதல் 31 வரை காலிறுதிச்சுற்று ஆட்டங்கள்
பிப்ரவரி 4, 6 - அரையிறுதிச்சுற்று ஆட்டங்கள்
பிப்ரவரி 9: இறுதிச்சுற்று ஆட்டம்
(அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகின்றன.)
இந்திய யு-19 அணி:
பிரியம் கர்க் (கேப்டன், உத்தர பிரதேசம்), துருவ் சந்த் ஜுரெல் (துணை கேப்டன், உத்தர பிரதேசம்), யாஷ்வி ஜைஸ்வால் (மும்பை), திலக் வர்மா (ஹைதராபாத்), திவ்யான்ஷ் சக்ஷேனா (மும்பை), ஷஷ்வத் ராவத் (பரோடா), திவ்யான்ஷ் ஜோஷி (மிஸோரம்), ஷுபாங் ஹெக்டே (கர்நாடகா), ரவி பிஷ்னாய் (ராஜஸ்தான்), ஆகாஷ் சிங் (ராஜஸ்தான்), கார்த்தி தியாகி (உத்தர பிரதேசம்), அதர்வா அன்கோல்கர் (மும்பை), குமார் குஷாக்ரா (ஜார்கண்ட்), ஷுஷாந்த் மிஸ்ரா (ஜார்கண்ட்), வித்யாதர் பாட்டீல் (கர்நாடகா).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

15 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் நடுவச்சேரி ஊராட்சி மன்றம் முற்றுகை!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


