ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி: பெங்களூர் ஒருநாள் ஆட்டத்தின் விடியோ ஹைலைட்ஸ்!

இறுதி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி.யை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்திய அணி.
ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி: பெங்களூர் ஒருநாள் ஆட்டத்தின் விடியோ ஹைலைட்ஸ்!
Updated on
1 min read

இந்தியா -  ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்றது. இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வென்ற நிலையில், இறுதி ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இறுதி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி.யை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்திய அணி.

முதலில் ஆடிய ஆஸி. அணி ஸ்மித்தின் அற்புத சதத்தால் (131) 286/9 ரன்களைக் குவித்தது. 47.3 ஓவா்களிலேயே 289/3 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. 6 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 128 பந்துகளில் 119 ரன்களை விளாசினார் ரோஹித் சர்மா. கோலி 89 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com