2-வது ஒருநாள் ஆட்டத்தில் தனக்குக் கிடைத்த ஆட்ட நாயகனுக்கான பரிசுத்தொகை ரூ. 1 லட்சம் உள்ளிட்ட ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெசன்ட் நினைவு விலங்குகள் சிகிச்சை மையத்துக்கு வழங்கியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்குக்காக ஆட்ட நாயகன் விருதையும் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றார் கே.எல். ராகுல். இந்நிலையில் தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையுடன் சேர்த்து கூடுதலாக மேலும் ஒரு லட்சத்தையும் சேர்த்து ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக சென்னை பெசண்ட் நகரில் உள்ள விலங்குகள் சிகிச்சை மையத்துக்கு அளித்துள்ளார்.
இதுகுறித்து பெசன்ட் நினைவு விலங்குகள் சிகிச்சை மையம் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளதாவது:
எங்களுக்கு கே.எல். ராகுல் ரூ. 2 லட்சம் உதவித்தொகை அளித்துள்ளார். இப்போது மட்டும் அவர் உதவவில்லை. எப்போதும் எங்களுக்கு ஆதரவாக உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


