பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

டி20-யிலும் ராகுல் தான் விக்கெட் கீப்பர்: விராட் கோலி தகவல்

ராகுல் விக்கெட் கீப்பராக நன்குச் செயல்படுவதால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடிகிறது...

News image
Updated On :23 ஜனவரி 2020, 10:54 am

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது. 

இந்நிலையில் டி20 ஆட்டத்திலும் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:

ஒருநாள் ஆட்டங்களில் ராஜ்கோட்டில் என்ன திட்டமிட்டோமோ அதையே இங்கும் செயல்படுத்துவோம். புதிய தொடக்க வீரர் விளையாடுவார், ராகுல் 5-ம் நிலை வீரராக விளையாடுவார். டி20 கிரிக்கெட்டில் கொஞ்சம் மாறுபடும். அதில் ராகுல் தொடக்க வீரராக விளையாடுவார். 

ராகுல் விக்கெட் கீப்பராக நன்குச் செயல்படுவதால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடிகிறது. அவர் நன்றாக பேட்டிங் செய்து, நன்கு கீப்பிங் செய்கிறபோது இதை நாங்கள் ஏன் செயல்படுத்தக்கூடாது? இதைச் சிறிது காலத்துக்குத் தொடரவுள்ளோம். யாரிடம் இருந்தும் எதையும் பறிக்கவில்லை. இதுதான் அணிக்குச் சிறந்த முடிவாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.