ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 3-வது சுற்றில் சீனாவின் கியங் வாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
இந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்று 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை செரீனா வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகின் 29-ம் நிலை வீராங்கனையான வாங்கிடம் 4-6, 6-7 (7-2), 5-7 எனத் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மார்கரெட் கோர்ட்டின் சாதனையை செரீனா வீழ்த்துவார் என்கிற எதிர்பார்ப்பு இதன் மூலம் மேலும் நீடிக்கிறது. கடைசியாக 2017-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற பிறகு செரீனா ஏந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லவில்லை. குழந்தை பிறந்த பிறகு கலந்துகொண்ட 7 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நான்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார் செரீனா. எனினும் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு அவர் இன்னும் காத்திருக்கவேண்டிய நிலைமையே தற்போது உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


