பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடிடிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

3-வது டி20: ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 179 ரன்கள் குவிப்பு!

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. 

News image
Updated On :29 ஜனவரி 2020, 11:14 am

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ஒரு மாற்றம். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. 

ஆக்லாந்தில் நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. 5-வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்திருந்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரை பென்னட் வீசினார். முதல் பந்தில் ராகுல் ஒரு ரன் எடுத்தார். கடைசி 5 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, முதலில் 2 சிக்ஸர்கள் அடித்தார், அடுத்து இரு பவுண்டரிகள், கடைசிப் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 27 ரன்கள் கிடைத்தன. ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரை சதமெடுத்தார். 6-ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது இந்திய அணி.

டி20 ஆட்டத்தின் பவர்பிளேயில் அரை சதம் எடுத்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் ரோஹித் பெற்றார். இதற்கு முன்பு அதிகபட்சமாக தவன் 48 ரன்கள் எடுத்திருந்தார். 

மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் தொடக்க வீரராக 10,000 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ராகுல் 9-வது ஓவரின் முடிவில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரன் குவிக்கும் வேகம் குறைந்து போனது. கோலிக்குப் பதிலாக 3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஷிவம் டுபே, ரன் எடுக்கத் தடுமாறினார். 7 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை மட்டுமே சேர்த்து பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு முன்பு ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களுடன் ஆட்டமிழந்ததால் இந்திய அணி சில ஓவர்களுக்குத் தடுமாற ஆரம்பித்தது. அவருடைய விக்கெட்டையும் பென்னட் தான் வீழ்த்தினார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் விழுந்ததால் அடுத்து வந்த கோலியும் ஷ்ரேயஸ் ஐயரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினார்கள். ஏழு ஓவர்களுக்குப் பிறகு 11 ஆக இருந்த ரன்ரேட் 11 ஓவர்களுக்குப் பிறகு 9 ஆகக் குறைந்தது. இரு ஓவர்கள் நிதானமாக விளையாடிய கோலி, ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார்.

16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலி, 38 ரன்களில் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார் கோலி. 

20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 10, மணிஷ் பாண்டே 14 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸிலாந்துத் தரப்பில் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.