மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல் டெஸ்டிலிருந்து ஜோ ரூட் விலகல்: இங்கிலாந்து கேப்டன் ஆனார் பென் ஸ்டோக்ஸ்!

பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று...

News image
Updated On :1 ஜூலை 2020, 4:50 am

DIN

சமீபகாலமாக இங்கிலாந்து அணிக்காக பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி வரும் பென் ஸ்டோக்ஸ், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் செளதாம்படனில் நடைபெறுகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜோ ரூட்டின் மனைவி கேரி-க்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் பயிற்சி முகாமிலிருந்து விலகவுள்ள ஜோ ரூட், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார். மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு தனது வீட்டில் 7 நாள்களுக்குச் சுயமாகத் தனிமைப்படுத்திகொள்வார். 2-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு இங்கிலாந்து அணியினருடன் ஜோ ரூட் இணைந்து கொள்வார். இதனால் முதல் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.