மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெத்தவங்க எப்படி துடிச்சிருப்பாங்க?: சிறுமி படுகொலை குறித்து ஹர்பஜன் சிங் வேதனை

புதுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

News image
Updated On :3 ஜூலை 2020, 11:25 am

DIN

புதுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே ஆவுடையாா்கோவில் வட்டம், ஏம்பல் மேக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 7 வயது சிறுமி புதன்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ஊருணியில் இருந்து உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து, சடலத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ராஜா என்பவரை விசாரித்துவந்தனா். இதில், அவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து குளத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிந்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல. ரொம்ப கஷ்டமா இருக்குயா என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.