ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒத்திவைக்கப்படும் டி20 உலகக் கோப்பை: இந்த வாரம் முடிவெடுக்கும் ஐசிசி!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படவுள்ளதாக...

News image
Updated On :6 ஜூலை 2020, 7:42 am

DIN


கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்கிற கேள்விக்கு விடை தேடுவதற்காக ஐசிசி கூட்டம் ஜூன் 10 அன்று நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் கரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ள நிலையில் பொறுத்திருந்து இறுதி முடிவை எடுக்க ஐசிசி திட்டமிட்டது. 

எனினும் திட்டமிட்டபடி டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியாவில் நடத்த ஏராளமான சிக்கல்கள் உள்ளதால் இதுகுறித்து முடிவெடுக்க இந்த வாரம் வெள்ளியன்று ஐசிசி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்கும் முடிவை எடுக்கவுள்ளது ஐசிசி. இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்.

அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் ஆஸ்திரேலியாவில் 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை நடத்தவும் ஐசிசி யோசித்து வருகிறது. இதையடுத்து செப்டம்பரில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள், டி20 தொடர்களுக்காகப் பயிற்சி எடுக்கும்படி ஆஸி. வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.