பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

31,258: ராகுல் டிராவிடின் சாதனையைப் பகிர்ந்த ஐசிசி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் நிகழ்த்திய சாதனை பற்றி ட்வீட் செய்துள்ளது ஐசிசி அமைப்பு.

News image
Updated On :11 ஜூலை 2020, 9:30 am

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் நிகழ்த்திய சாதனை பற்றி ட்வீட் செய்துள்ளது ஐசிசி அமைப்பு.

1996 முதல் 2012 வரை விளையாடிய ராகுல் டிராவிட், 164 டெஸ்டுகளில் பங்கேற்றுள்ளார். டிராவிடை விடவும் அதிக டெஸ்டுகளில் சச்சினும் காலிஸும் விளையாடியுள்ளார்கள். எனினும் இவ்விருவரை விடவும் டிராவிடே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

200 டெஸ்டுகளில் விளையாடிய சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29,437 பந்துகளையும் 166 டெஸ்டுகளில் விளையாடிய காலிஸ் 28,903 பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார்கள். ஆனால் இவ்விருவரை விடவும் குறைவான டெஸ்டுகளில் விளையாடிய டிராவிட், தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 31,258 பந்துகளை எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளார். 

இதுபற்றி ட்வீட் வெளியிட்டுள்ள ஐசிசி, 31,258 - டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு யாரை விடவும் அதிகப் பந்துகளை ஆடியவர் டிராவிட். வேறு எந்த பேட்ஸ்மேனும் 30,000 பந்துகளைக் கூட எதிர்கொண்டதில்லை. ஒவ்வொரு டெஸ்டிலும் 190.6 பந்துகளை அவர் விளையாடியுள்ளார் என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.