புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெற்றது ஏன்?: பத்ரிநாத் பதில்

எல்லாமே சரியாகப் போய்க்கொண்டிருக்கும்போது அதில் மாற்றம் செய்யக்கூடாது என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டேன்...

News image
Updated On :11 ஜூலை 2020, 6:57 am

DIN

முதுகுப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டதால் முதல் தர கிரிக்கெட்டிலோ டெஸ்ட் ஆட்டங்களிலோ தோனி விளையாடுவதில்லை என முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான பத்ரிநாத், தோனி பற்றி கூறியதாவது:

எல்லாமே சரியாகப் போய்க்கொண்டிருக்கும்போது அதில் மாற்றம் செய்யக்கூடாது என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டேன். நமக்குத் தெரியாமலே ஏதோவொன்று எல்லாவற்றையும் சரியாக இயங்க வைக்கும். எனவே அதை நாம் தொடக்கூடாது. ஆடுகளத்தில் பணியைச் சரியாக முடிக்கும் அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்று.

எப்போது விளையாட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வது முக்கியம். இத்தனை ஆண்டுகளாக விளையாடியதால் அவருடைய உடல் அதிகமாக உழைத்துள்ளது. அவர் முதல் தர கிரிக்கெட்டிலோ டெஸ்ட் கிரிக்கெட்டிலோ விளையாடாததற்கு ஒரு காரணம் உண்டு - அவருடைய முதுகுப் பகுதி அவரை மிகவும் தொந்தரவு செய்துள்ளது. ஏராளமான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி அதிகமாக உழைத்துள்ள எல்லா விக்கெட் கீப்பர்களுக்கும் இதுபோல நேரிடும். தன்னால் இனி எவ்வளவு தூரம் விளையாட முடியும் என்பதை அவர் மதிப்பிட்டு வருகிறார். எப்போது விளையாட வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும். தோனியைப் பற்றி ஏராளமான யூகங்கள் வெளியே வருகின்றன. அதில் எதுவும் உண்மையில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.